Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய பதிப்புகள்

To type in English

ஜன 12, 2024

மொத்த செய்திகள்: 1027

மேஷம்: அசுவினி: ஞானக்காரகனான கேது, தைரியக்காரகன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, நினைத்ததை சாதித்திடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, இந்த மாதம் எதிர்பார்ப்பு நிறைவேறக்கூடிய மாதமாக இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தை உங்களுக்கு இப்போது பொருத்தமானதாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். பணி, தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். இதுவரையில் மேற்கொண்ட முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்காக நீங்கள் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசு வழியில் ஆதாய நிலை உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தம்பதியரிடையே இணக்கமான நிலை உருவாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். முயற்சிகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் லாபத்தில் முடியும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் தோன்றும்.சந்திராஷ்டமம்: பிப். 3,4.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16,18,25,27, பிப். 7,9.பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சங்கடங்கள் விலகும்.பரணி : அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், வீரியக்காரகன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்து மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் உங்களுக்கு, இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். நினைத்த செயல் நினைத்தபடி நடந்தேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில், பணி போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். தம்பதியரிடையே இருந்த பிரச்னைகள் விலகும். பெண்கள் வாழ்க்கையில் இதுவரையில் நிலவிய சங்கடங்கள் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியில் இருப்பவர்கள், பணியாளர்கள் விருப்பம் பூர்த்தியாகும். விவசாயிகளின் விளைப் பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டமான நிலை ஏற்படும். மாணவர்களின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சந்திராஷ்டமம்: பிப். 4,5.அதிர்ஷ்ட நாள்: ஜன.15,18,24,27, பிப். 6,9.பரிகாரம்: துர்கைக்கு குங்குமம் சாத்தி வழிபட வளம் உண்டாகும்.கார்த்திகை 1 ம் பாதம் : ஆத்மகாரகனான சூரியன், பராக்கிரமக் காரகன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,  இயல்பாகவே எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். பணியில் இருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். தம்பதியரிடையே இருந்த சங்கடங்கள், ஈகோ விலகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். கட்சிக்குள் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கலைத்துறையினரின் கனவுகள் நிறைவேறும். திட்டமிட்ட செயல்கள் லாபமாகும். விவசாயத்தில் ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: பிப். 6.அதிர்ஷ்ட நாள்: ஜன.18,19,27,28, பிப்.1,9,10.பரிகாரம்: நவகிரகத்திற்கு தீபமேற்றி வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: ஆற்றல் காரகனான சூரியன், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற மாதமாக இருக்கும். நீங்கள் நினைப்பதை நடத்திக் கொள்வீர்கள். ரகசிய முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஆதாயம் அடைவீர்கள். லாப ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருந்த தடைகள் விலகும். தைரியமாக செயல்படுவீர்கள். வருவாயை வைத்து மற்றவர்களுக்கு உதவிகளும் செய்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தான சனியால் தொழிலில் அதிகபட்சமான அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நிலைமை உண்டாகும். தம்பதியருக்கிடையே சுமூகமான நிலை ஏற்படும். அரசியல்வாதிகள் செயல்களில் தொய்வு ஏற்படும் என்றாலும் நினைத்தது நிறைவேறும். கலைஞர்களின் செல்வாக்கு உயரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். வெளிநாட்டிற்கு சென்றுவரும் யோகம் சிலருக்கு ஏற்படும். பெண்கள் இக்காலத்தில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையை உண்டாக்கும். விளைபொருட்களுக்கு லாபம் அதிகரிக்கும். விரய குருவால் செலவுகள் தோன்றினாலும் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு உயரும். மாணவர்கள்  ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப். 6.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,19,24,28, பிப்.1,6,10.பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.ரோகிணி: மனக்காரகனான சந்திரன், கலைக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதத்தில் ஆசைகள் அதிகரிக்கும். வருமானத்தின் மீது நாட்டம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கைக்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளைப் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். அவர்களுக்காக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். தம்பதியருக்குள் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் நட்புகளிடம் கவனமாக இருப்பது அவசியம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் திறமை மதிக்கப்படும். உத்தியோகத்திற்காக முயற்சித்து வந்தவர்களின் செயல் வெற்றியாகும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் நினைத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தலைமையிடம் சாதகமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு புதிய பாதை தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாக இருக்கும். சந்திராஷ்டமம்: பிப். 7.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,20,24,29, பிப். 2,6,11.பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சந்திர பகவானுக்கு வெள்ளை அல்லியை சார்த்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், பராக்கிரமக் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, மாதத்தின் முற்பகுதியில் அறிவாற்றல் மேம்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வந்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு உங்கள் செயல்களை வெற்றியாக்கும். முயற்சிகளை லாபமாக்கும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். பணியாளர்கள் முதலாளியால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் தனித்திறமை இப்போது வெளிப்படும். தம்பதியருக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ரகசியங்களை மற்றவரிடம் கூறாமல் இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு நன்மையாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். போட்டியாளர்களால் சங்கடம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விற்பனையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: பிப். 8.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,18,24,27, பிப். 6,9.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் தீரும்.
மிருகசீரிடம் 3,4 ம் பாதம் : தைரிய, வீரிய காரகனான செவ்வாய், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக அமையும். லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியாகும்.  தொழிலில் இருந்த தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்வாக்கு உயரும். புதிய பதவி, பொறுப்புகள் வந்து சேரும். உங்கள் புத்தி சாதுரியத்தால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். பணியில் உண்டான சங்கடங்கள் விலகும். தொழிலாளர்கள் சங்கடங்கள் விலகும். பாக்கிய சனியால் பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். தம்பதிகளுக்குள் உண்டான சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அதற்குரிய பாக்கியம் உண்டாகும். உங்கள் உழைப்பிற்கு பலன் கூடுதலாகும். வெளிநாட்டு முயற்சிகள் லாபத்தை உண்டாக்கும். பெண்களின் நீண்டநாள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.  மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 8அதிர்ஷ்ட நாள்: ஜன. 18,23,27. பிப். 5,9.பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட நன்மை உண்டாகும்.திருவாதிரை:  அறிவுக்காரகனான புதன், யோகக்காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதத்தில் செயல்கள் யாவும் வெற்றியாகும். நினைப்பது யாவும் நடந்தேறும். புதிய முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகளில் இருந்த தடைகள் விலகும். அலைச்சல் அதிகரித்தாலும் அதற்குரிய பலன்கள் உண்டாகும். லாபம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். சிலருக்கு ரகசிய செயல்களில் ஈடுபாடு உண்டாகும். அதனால் சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்படும். பணியில் இருப்பவர்களின் பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். இருந்தாலும் பணிகளில் கவனம் அவசியம். ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக செயல்பட்டால் எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படாமல் போகும். தம்பதியருக்கிடையே பிரச்னைகள் ஏற்பட்டாலும் விரைவில் அது சரியாகி விடும். ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலருக்கு எதிர்பாலினரால் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்காக முயற்சித்து வந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை, புதிய வீடு கட்டி அதில்  குடியேறும் நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். செல்வாக்கும் உயரும். விவசாயிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். பெண்களின் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள்.சந்திராஷ்டமம்: பிப். 9அதிர்ஷ்ட நாள்: ஜன. 22,23,31, பிப். 4,5,பரிகாரம்: பிரத்யங்கிராவை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3ம் பாதம் : தெய்வீக அறிவிற்கும் வேதாந்த ஞானத்திற்கும் காரகனான குரு, கல்விக்கும் அறிவுக்கும் காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் வெற்றிகளை அடையக்கூடிய மாதமாக இருக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.  வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு அதிகரிக்கும்.  தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளை சமாளித்து விற்பனையில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். கலைத்துறையினரின் விருப்பம் நிறைவேறும். விவசாயிகளின் விளை பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பெண்களின் கனவு நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 10அதிர்ஷட நாள்: ஜன. 21,23,30, பிப்.3,5,12.பரிகாரம்: உலகளந்த பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட துயரம் தீரும்.
புனர்பூசம் 4 ம் பாதம்: உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன், தன புத்திரக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு  இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும்.  தொழிலில் முன்னேற்றம் தோன்றும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற தொடங்கும். இயந்திரத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாகனப் பயணத்தில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக சிலர் சதிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்திடக்கூடிய வலிமை உங்களுக்கு உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிர்ப்புகள் விலக ஆரம்பிக்கும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலை இப்போது ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார். வெளிநாட்டு வர்த்தகம் அனுகூலமாகும். கலைத்துறையினருக்கு நீண்டநாள் கனவு நினைவாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். அடிப்படை வசதிகள் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலக நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 10அதிர்ஷ்ட நாள்: ஜன. 20,21,29,30. பிப். 2,3,11,12.பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட நன்மை அதிகரிக்கும்.பூசம்: கர்மக்காரகன், ஆயுள் காரகனான சனி, மனோ காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய மாதமாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உதவிகள் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய முயற்சி லாபமாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியாளர்களின் நிலை உயரும்.  தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்வாக்கு உயரும். உங்களின் சொல், வார்த்தைக்கு மதிப்புண்டாகும். உங்கள் திறமையை மேலிடத்தில் அங்கீகரிப்பார்கள். மனதில் இருந்த குழப்பம் விலக ஆரம்பிக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரத்தில் சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரியோர்களின் ஆதரவு அதிகரிக்கும். தெய்வ அருள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். பெண்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும் மாதமாக அமையும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: பிப். 10,11.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 20, 26,29, பிப். 2,8,11.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.ஆயில்யம் : வித்யாகாரகனான புதன், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். வழக்குகளால் உண்டான சங்கடங்கள் நீங்கும். குரு பகவானின் பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி முன்னேற்றம் தோன்றும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடலில் இருந்த சங்கடங்கள் நீங்க ஆரம்பிக்கும். மறைமுகத் தொல்லைகளை கண்டறிந்து எச்சரிக்கை அடைவீர்கள். வெளிவட்டாரத்தில், பொது வாழ்க்கையில் உங்கள் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர். சந்திராஷ்டமம்: பிப். 11,12அதிர்ஷ்ட நாள்: ஜன. 20,23,29. பிப். 2,5,11.பரிகாரம்:  புதன் பகவானுக்கு பச்சை ஆடை அணிவித்து வழிபட நன்மை அதிகரிக்கும்.
மகம்: ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். போட்டியாளர்களால் உண்டான சங்கடங்கள் அகலும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்வாக்கு உயரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். குடும்ப உறவுகளிடம் அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்கள் இக்காலத்தில் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். அந்நியர்களால்  சில சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வெளிநாட்டு முயற்சிகள் இக்காலத்தில் இழுபறியாகும். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகள் தோன்றி மறையும். பெண்களுக்கு இந்த மாதம் சுமாராக இருக்கும். முயற்சிகள் யாவும் கடுமையான போராட்டத்திற்குப் பின் நிறைவேறும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். இருந்தாலும் உங்கள் தனித்திறமை போற்றப்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: பிப்.12அதிர்ஷ்ட நாள்: ஜன.16,19,25,28. பிப். 1,7,10.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட கஷ்டம் தீரும்.பூரம்: ஆத்மகாரகனான சூரியன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் முழுமையான கவனம் இருக்கும். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். சிலருக்கு புதிய வாகனம், சொத்து சேர்க்கை உண்டாகும். அரசு வகையில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். பணியில் இருப்பவர்களின் பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பணியாளர்கள் சங்கடங்களில் இருந்து விடுபடுவர். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். லாபநிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும் குருவின் பார்வை உங்களுக்கு உண்டாவதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கவனம் அவசியம். பெண்களுக்கு குடும்பத்தில் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும் என்றாலும் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். மாங்கல்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும் என்பதால் நேரம் அறிந்து செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள்.சந்திராஷ்டமம்: ஜன.15.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19,24,28. பிப். 1,6,10.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட மேன்மை உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: பாவங்களை எல்லாம் அழித்திடக் கூடிய ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும், ராசியிலும் பிறந்த உங்களுக்கு அனைத்திலும் தேர்ந்த ஞானம் என்பது எப்போதும் இருக்கும். அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். இந்த மாதத்தில் சூரியன் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும். முயற்சிகள் யாவும் சாதகமாகும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.  தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். 2ம் இட கேது, 7ம் இட சனி, 8ம் இட ராகுவால் ஏற்படும் நெருக்கடிகளை 6ம் இட சூரியனும், பாக்ய குருவும் விலக்கி வைப்பார்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். பெண்களின் விருப்பம் நிறைவேறும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். குலதெய்வ அருள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நன்மையாக இருக்கும். விவசாயிகளின் விலைபொருட்கள் நல்ல விலை போகும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். சந்திராஷ்டமம்: ஜன. 16.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 28. பிப். 1,10.பரிகாரம்: திருக்கோவிலுார் வீரட்டேஸ்வரரை வழிபட வினைகள் தீரும்.
உத்திரம் 2,3,4 ம் பாதம் : வித்யாகாரகனான புதன், ஆத்மகாரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு அறிவாற்றல் என்பது நீங்கள் பெற்ற வரமாகும். இந்த மாத முற்பகுதியில் உங்கள் ராசிநாதன் சாதகமான பலன்களை உங்களுக்கு வழங்குவார். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பின் விளைவுகள்பற்றி யோசிப்பீர்கள். 6ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்களை எல்லாம் விலக்கி வைப்பார். உடல்நிலையில் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவார். பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவார். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 7ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சங்கடங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. நட்புகளிடமும், வாழ்க்கைத் துணையிடமும் பிரச்னை உருவாகும் என்பதால் எச்சரிக்கை அவசியம். குருபகவானின் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்திற்கு பதிவதால் ஜென்ம கேதுவால் உண்டாகும். பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். விரயங்கள் சுப விரயங்களாக மாறும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். அதிக ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ்பவர்களுக்கு எந்த விதமான சங்கடங்களும் ஏற்படாமல் போகும். பெண்களின் முயற்சி இழுபறியாகும் வாழ்க்கைத்துணையுடன் பிரச்னைகள் தோன்றும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். பணிபுரியும் இடத்தில் யாரிடமும் பேச்சில் கூட நெருக்கம் காட்ட வேண்டாம். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். ஆனாலும் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜன.16.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19,23,28. பிப்.1,5,10.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட நினைத்தது நிறைவேறும்.அஸ்தம்: மனம், மகிழ்ச்சி, புகழுக்கெல்லாம் காரகனான சந்திரன், கல்விக்கும் அறிவுக்கும் காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்தவொரு செயலையும் சாமர்த்தியமாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அதன் காரணமாக சங்கடங்கள் பற்றியும் அதிக அளவில் கவலைப்பட மாட்டீர்கள். சந்தோஷ நிலையிலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள். இந்த மாதத்தில் உங்கள் ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரித்து குழப்பத்தை அதிகரித்தாலும், குரு பகவானின் பார்வைகள் சாதக பலன்களை ஏற்படுத்தும். குடும்பம், சுகம் போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். விரயச் செலவு அதிகரிக்கும் என்றாலும் சத்ரு ஸ்தான சனிபகவான், இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தீர்த்து வைப்பார். உடல் நிலை பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழில், பணி போன்றவற்றில் இருந்த எதிர்நிலை மாறும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஆற்றல் வெளிப்படும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும் என்றாலும் அதனால் சங்கடம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்த ஒன்றிலும் பின் விளைவு பற்றி தெரிந்து கொண்டு செயல்படுவது நன்மையாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். இருந்தாலும் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.சந்திராஷ்டமம்: ஜன. 17.அதிர்ஷ்ட நாள்: ஜன. 20,23,29, பிப். 2,5,11.பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை 1, 2 ம் பாதம் : ரத்தக்காரகன், யுத்தக்காரகன், பராக்ரமக் காரகனான செவ்வாய், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் வல்லமை இருக்கும். எதையும் சாதுரியமாக செய்வீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உங்கள் வாழ்வில் உண்மையாகும்.  இதுவரையில் சங்கடத்தை அடைந்த உங்களுக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி நன்மைகளை வழங்குவார். முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். தடைகளை போக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் பொன், பொருள் சேர்க்கை உண்டாக்குவார். புதபகவானின் சஞ்சார நிலைகள் உங்கள் செயல்பாடுகளில் வெற்றியை உண்டாக்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகி அவர்களால் ஆதாயம் ஏற்படும் என்றாலும் சங்கடங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் அவரின் பார்வைகள் மேம்பாட்டை உண்டாக்கும். பணவரவிற்கு வழிவகுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தை அதிகரிக்கும். புதிய இடம், வாகனம் வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்துக்கொண்டு செல்வீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். மற்றவர்களின் ஆலோசனைகள் உங்களை திசைதிருப்பும் என்பதால் சுயமாக சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்களிலிருந்து விடுபட முடியும். குடும்பத்தில் நிம்மதியைக் காணமுடியும். பணியில் இருந்த பிரச்னைகளில் இருந்து வெளியில் வரமுடியும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செல்லும்.சந்திராஷ்டமம்: ஜன. 17,18.அதிர்ஷ்ட நாள்: ஜன. 23,27. பிப். 5,9.பரிகாரம்: வராகியமமனையை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
சித்திரை 3,4 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தைரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் உங்கள் முன்னேற்றத்தை நோக்கிய சிந்தனை இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் வெற்றியாகும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை எல்லாம் வெற்றியாக்குவார். குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். மாணவர்களின் சிந்தனையில் தெளிவு உண்டாகும். படிப்பில் கவனம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன.18.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,24,27. பிப். 6,9.பரிகாரம்: சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.சுவாதி: யோகக்காரகன் போகக்காரகனான ராகு, அதிர்ஷ்டக்காரகன் களத்திரக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும்  அதிகமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு யோகமாதம். உங்கள் நட்சத்திரநாதன் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உடலில் இருந்த பிரச்னைகள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். அல்லது தேடி வந்து சமாதானம் பேசுவர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடிகள், தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரத் தொடங்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். கடவுள் சிந்தனை அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை, பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். பெண்களுக்கு அனுகூலம் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களின் கவனம் கல்வியின் மீது செல்லும்.சந்திராஷ்டமம்: ஜன. 18,19.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,22,24,31, பிப். 4,6.பரிகாரம்: திருநாகேஸ்வரரை வழிபட தடைகள் விலகும்.விசாகம் 1,2,3 ம் பாதம்: தனக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் முயற்சிகளே எப்பொழுதும் வெற்றியை உண்டாக்கும் என்ற நிலையில், இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் செல்வாக்கு உயரும். அந்தஸ்து மேம்படும். எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும்.  தொழில், பார்த்துவரும் உத்தியோகத்திலிருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் லாபத்தை உண்டாக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையாலும் நண்பர்களாலும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை கொள்வீர்கள். ஆசிரியர்கள் உதவியாக இருப்பார்கள்.சந்திராஷ்டமம்: ஜன. 19,20.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,21,24,30. பிப். 3,6.12.பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் 4 ம் பாதம்:  விவேகத்திற்கும் வித்தைகளுக்கும் அந்தஸ்திற்கும் காரகனான குரு, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தைரியமும் மன உறுதியும் பிறவி சொத்தாகும். இந்த மாதம் உங்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் முன்னேற்றமான பலன்களை வழங்குவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் நன்மை அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். தடைபட்ட செயல்கள் நடைபெற ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர்களின் சங்கடங்கள் விலகும். சுக்கிரனின் சஞ்சாரங்களால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். கணவன், மனைவிக்குள் உண்டான பிரச்னை விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகி லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். குலதெய்வ வழிபாட்டால் சங்கடம் விலக ஆரம்பிக்கும் என்றாலும்,  சிலருக்கு தேவையில்லாத சங்கடங்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்தவற்றை அடையும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 20.அதிர்ஷ்ட நாள்: ஜன. 18,21,27,30. பிப். 3,9,12.பரிகாரம்: செவ்வாய் பகவானுக்கு சிவப்புநிற வஸ்திரம் சார்த்தி வழிபட சங்கடம் தீரும்.அனுஷம் : ஆயுள்காரகன், கர்மகாரகனான சனி, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தைரியமும், எடுத்த செயலை முடிக்கும் வலிமையும் இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் கூடுதலாக இருக்கும். வருமானத்தில் சில தடைகளும் ஏற்படும் என்றாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு மருத்துவச்செலவுகள் உண்டானாலும் உடல்நிலை சீராகும். 3 ம் இட சூரியனால் அரசு வழி செயல்களில் ஆதாயம் ஏற்படும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் ஏற்படும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். குருவின் பார்வைகளால் சங்கடங்கள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும் உடல் நிலையில் கவனம் தேவை. செயல்களில் விழிப்புணர்வு அவசியம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 20,21.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,18,26,27. பிப். 8,9.பரிகாரம்: கபாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட கஷ்டம் தீரும்.கேட்டை: சகோதர காரகனான செவ்வாய், வித்யாகாரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு பக்கம் வேகம் இருந்தாலும் மறுபக்கம் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். இந்த மாதம் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், குருவின் பார்வைகளும், சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் இதுவரையிருந்த சங்கடங்களை இல்லாமல் செய்யும். உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். தொழிலாளர்கள் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் இட சனியால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியால் அனைத்திலும் லாபம் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் பகவானும் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி யாவும் லாபமாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடம் விலகும். பெண்களுக்கு குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகி நிம்மதியான நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருவாய் உயரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜன. 21,22.அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 23, 27. ஜன.5,9.பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் தீரும்.
மூலம்: ஞான மோட்ச காரகனான கேது, புத்திர காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றல் இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் ராசிநாதன் 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையிருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும். உங்கள் திறமைக்கு மதிப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் நட்சத்திரநாதன் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் போகும். பெண்களுக்கு இது யோக காலமாக இருக்கும். கல்வி, பணி போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய பணம் வரும். மாணவர்கள் கல்வியில் கூடுதலாக கவனம் செலுத்துவதால் நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 22,23.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16,21,25,30. பிப். 3,7,12.பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட கஷ்டம் தீரும்.பூராடம்: அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், அந்தஸ்து, ஆற்றலை வழங்கும் குருபகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொன்றையும் ஆழ்ந்தறிந்து அதில் வெற்றி அடையும் சக்தி இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் நட்சத்திர நாதனும், ராசி நாதனும் இணைந்துநன்மைகளை வழங்க இருக்கிறார்கள். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் இப்போது விலகும். பணியில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். மற்றவர்களுக்கிடையில் தனித்திறமை வெளிப்படும். பாராட்டிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். புதிய சொத்து, பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். இதுவரை தள்ளிப்போன நல்ல விஷயங்களை இப்போது கையில் எடுப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பெண்களின் வாழ்வில் இது வசந்த காலமாக இருக்கும். இதுவரையில் எதிர்பார்த்திருந்ததை எல்லாம் அடையும் நிலை உண்டாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மதிப்பும் பொறுப்பும் அதிகரிக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். சந்திராஷ்டமம்: ஜன. 23,24.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,21,30, பிப். 3,6,12.பரிகாரம்: அஷ்ட லட்சுமி வழிபாடு அல்லல் போக்கும்.உத்திராடம் 1 ம் பாதம்: ஆற்றல்காரகன் ஆன்ம காரகனான சூரியன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, திட்டமிட்டு செயல்படக்கூடிய ஆற்றல் என்பது எப்போதும் இருக்கும். இந்த மாதம் சனி பகவான் 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் முன்னேற்றமடையும். ஏழரை சனியின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். குருபகவானின் பார்வைகள் பாக்ய, லாப, ஸ்தானங்களின் மீதும் உங்கள் ராசியின் மீதும் பதிவதால் எல்லா விதமான நன்மைகளும் இக்காலத்தில் உங்களுக்கு நடந்தேறும். இதுவரையில் எதிர்பார்த்து நடக்காமல்போன யாவும் இனி நடந்தேறும். வரவுகள் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சங்கடங்கள் யாவும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழி செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் நிறைவேறும். பெண்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். தெய்வ அருள் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பீர்கள். குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று செயல்படுவீர்கள். மாணவர்களின் நிலையில் முன்னேற்றம் தோன்றும். படிப்பில் கவனம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 25.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19,21,28,30. பிப். 1,3,10,12.பரிகாரம்: சூரிய பகவானுக்கு செந்தாமரை மலரை சார்த்தி வழிபட வளமுண்டாகும்.
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியன், ஆயுள்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் தனி ஆற்றல் இருக்கும். மற்றவர்களை உங்கள் செயல்களில் பங்கேற்க வைக்கும் சாமர்த்தியம் இருக்கும். உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் இதுவரையிருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். தொழில் தொடங்க மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். இதுவரை உடலில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியமாக செயல்படத் தொடங்குவீர்கள். மற்றவர்களால் உண்டான நெருக்கடி விலகி முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தெய்வீக அருள் உண்டாகும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உங்கள் முயற்சிகளை முன்னேற்றம் அடைய வைக்கும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவார். அரசியல்வாதிகளுக்கு தடைகள் விலகும். புதிய பொறுப்பு வந்து சேரும். பணியாளர்களின் நிலை உயரும். பணியாளர்களுக்கு விருப்பம் நிறைவேறும். பெண்களுக்கு உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணம் உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 25.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,19,26,28. பிப். 8,10.பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வளம் உண்டாகும்.திருவோணம்: உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன், ஆயுள்காரகனான சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலையும் தனித்து நின்று செய்து வெற்றி அடையும் சக்தி இருக்கும். இந்த மாதம் ஜென்ம சனிக்காலம் முடிவதால் உங்கள் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். சனிபகவானின் பார்வை ஆயுள் ஸ்தானத்தில் பதிந்தாலும் குரு பகவானின் பார்வையின் காரணமாக சங்கடங்கள் விலகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். செல்வாக்கு உயரத் தொடங்கும். தொழிலை விரிவு செய்வதற்குரிய முயற்சியை மேற்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தின் மீது குருபார்வை பதிவதால் சுபச்செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிலர் இருக்கும் இடத்தை மாற்றம் செய்வர். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் நிலையில் வெளிச்சம் உண்டாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். பெண்கள் மனதில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். கல்வி, வேலை வாய்ப்பு கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களிடம் ஆலோசனையை கேட்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன.26.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,20,26,29. பிப். 2,8,11.பரிகாரம்: சந்திர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் அணிவித்து வழிபட சங்கடம் தீரும். அவிட்டம் 1,2 ம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய், ஆயுள் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, எந்தவொரு செயலிலும் ஆதாயம் காணும் அறிவிருக்கும். இந்த மாதம் உங்கள் ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைகளில் டென்ஷன் உண்டாகும். விளைவு பற்றி யோசிக்காமல் பரபரப்பாக செயல்படுவீர்கள். 3ம் இட ராகுவால் முன்னேற்றம் அடைவீர்கள். தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் தொழிலில் புதியபாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தெய்வ அருளும் பெரியவர்களின் ஆதரவும் உண்டாகும். மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும் என்பதால் உங்கள் செயல்களில் நேரடியாக ஈடுபடுவதால் பிரச்னை இருக்காது. அலுவலகப் பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கு சில நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். வரவு சீராகும். எல்லாவித சங்கடங்களை சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 27.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,18,26. பிப். 8,9.பரிகாரம்: முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் 3,4 ம் பாதம்: உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் காரகனான செவ்வாய், சர்வ சக்திகளையும் வழங்கும் சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தைரியமும் செயல்களை முடிக்கும் ஆற்றலும்  இருக்கும். இந்த மாதம் உங்கள் ஜென்ம ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிப்பதுடன் தைரிய, சப்தம, தொழில் ஸ்தானங்களைப் பார்ப்பதால் உங்களுக்குள் குழப்பம் அதிகரிக்கும். ஒருவித பயம் தோன்றும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகலாம், நண்பர்களுடனும் கூட்டுத் தொழிலிலும் சங்கடங்கள் தோன்றலாம்.  தொழிலில் தடைகளும் வருமானக் குறைவும் ஏற்படலாம். அதே நேரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கையும் ஏற்படும். அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பொறுப்பு வந்து சேரும். பணியாளர்களுக்கு மறைமுகத்தொல்லை அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். பெண்களுக்கு வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். கணவரின் நலனில் சங்கடங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 27அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,18,26,  பிப். 8,9.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.சதயம்: போக காரகனான ராகு, கர்ம காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் ஆதாயத்தை நோக்கிய சிந்தனையே அதிகம் இருக்கும்.  இந்த மாதம் குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். வருமானத்தில் தடை, தாமதம் உண்டாகும். உங்கள் முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். எதிரிகளால் சங்கடங்களை சந்திக்க நேரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் அரசுவழி செயல்களில் தடைகளுடன் சிலர் அபராதம் செலுத்தவும் நேரும். மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் பெரிய அளவில் நெருக்கடி இல்லாமல் போகும். அதேசமயம் பிற்பகுதியில் நெருக்கடி அதிகரிக்கும். ஏதோ ஒரு குழப்பம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். பணியாளர்கள் தங்கள் பணியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.  தொழிலில் அக்கறை இருக்க வேண்டும். இல்லையெனில் சங்கடங்கள்  ஏற்படலாம். வாழ்க்கைத்துணையை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வதும், நிதானமாக செயல்படுவதும் நன்மை தரும். புதிய முயற்சிகள் இந்த மாதம் வேண்டாம். பெண்களுக்கு குழப்பம் அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றும். முயற்சிகள் தள்ளிப் போகும். குடும்பத்தில் தேவையற்ற சங்கடம் ஏற்படும். அரசியல்வாதிகள் தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவது அவசியம். சந்திராஷ்டமம்: ஜன. 28,29.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,22,26,31, பிப்.4,8.பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: ஆயுள் காரகனான சனிபகவான், தனகாரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமூகத்தில் எப்பொழுதும் தனி அந்தஸ்தும் கவுரவமும் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள் என்றாலும், அவருடைய பார்வைகள் சப்தம, பாக்ய, லாப ஸ்தானங்களில் பதிவதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். கடவுளின் அருள் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், புதனும் மாதத்தின் முற்பகுதியில் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தொழில், பணியில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார்கள். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். தொழிலாளர்கள் முயற்சி வெற்றியாகும். விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவர். மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் முழுகவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஜன. 29அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,21,26,30, பிப். 3,8,12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபாட்டால் அனைத்து தடைகளும் விலகும்.
பூரட்டாதி 4 ம் பாதம்; ஞானத்திற்கும் அந்தஸ்திற்கும் ஆற்றலுக்கும் காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் வலிமை இயல்பாகவே இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் அதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரவுகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும்படி செய்வார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தொழிலில் இருந்த தடைகள் விலகி ஆதாயம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய முயற்சிகள் வெற்றியாகும். அந்நியர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் அரசியல்வாதிகளுக்கும், பணியாளர்களுக்கும் செல்வாக்கை அதிகரிப்பார் இதுவரையில் தடைபட்டிருந்த முயற்சிகள் இனி வெற்றியாகும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். தொழிலாளர்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகள் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். சந்திராஷ்டமம்: ஜன. 30.அதிர்ஷ்ட நாள்: ஜன. 21, பிப்.3,12.பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.உத்திரட்டாதி: தன, புத்திர காரகனான குரு, கர்மகாரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் முன்னேற்றம் குறித்த சிந்தனை  அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து, குடும்ப, பாக்ய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்திற்குள் எதிர்பாராத நெருக்கடிகள், பிரச்னைகள், பணவரவில் தடைகள் ஏற்படும். பெரியோர்களுடன் கருத்து மோதல் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் ஏற்படும் என்றாலும் சத்ரு ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை பதிவதால் உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். போட்டியாளர்கள், மறைமுகமாக உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பணியில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு  இடமாற்றம் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் அக்கறை அதிகரிக்கும் என்றாலும் சில நேரங்களில் எதிர்மறையான சிந்தனைகளும் தோன்றும். ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் கணவன் மனைவிக்குள் சங்கடத்தை உண்டாக்குவர். புதிய நட்புகளால் குடும்பத்தில் குழப்பம் தோன்றும். வெளிநாடு செல்லும் முயற்சிக்கு அனுமதி கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கல்வியில் அக்கறை ஏற்படும். சந்திராஷ்டமம்: ஜன. 30,31.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,21,26. பிப். 3,8,12.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட நலம் சேரும். ரேவதி: அறிவுக்காரகனான புதன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலிலும் புத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு வெற்றியடையும் திறமையுண்டு. உங்கள் நட்சத்திரநாதன் தொழில், லாப ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். ராசி அதிபதி தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் என்றாலும் விரய சனியின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் உறவுகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்டிருந்த வரவு வந்து சேரும். ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு பூமி சேர்க்கை உண்டாகும். தொழிலாளர்களின் நிலை உயரும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். புத்திசாலித்தனம் வெளிப்படும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். விவசாயிகள் நிலை முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். சந்திராஷ்டமம்: ஜன 31, பிப்.1.அதிர்ஷ்டநாடகள்: ஜன. 21,23,30, பிப். 3,5,12.பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
Advertisement Tariff
Advertisement


      Our Apps Available On




      Dinamalar

      Follow us