ADDED : ஜன 12, 2024 06:35 AM
தேனி: தேர்தலில் ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய தகவல் தொடர்பு அலுவலகத்தில் கணொலி மூலம் போட்டி நடந்தது. மாவட்டத்தில் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். தேர்தல் பிரிவு அலுவலர்கள் போட்டியை ஒருங்கிணைத்தனர்.