/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
ADDED : ஜன 12, 2024 12:39 AM

திருவாரூர்:ஞானபுரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்திரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளிக்கவசம், சிவப்பு பட்டு வஸ்திரம் சாற்றி, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யாவிடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் லட்சுமி நரசிம்மர், கோதண்ட ராமர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஆஞ்சநேய சுவாமிக்கு விசேஷ அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை ஆஞ்சநேய சுவாமி வெள்ளி ரதத்தில் உலா நடைபெற்றது.
ஸ்ரேயன் ஸ்ரீராம், சம்ஹிதா குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலி ஆகியோர் செய்து இருந்தனர்.