ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்: வைரலாகும் வீடியோ
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்: வைரலாகும் வீடியோ
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்: வைரலாகும் வீடியோ
ADDED : ஜூன் 27, 2024 07:08 PM

மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி, -ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் வீடியோ இணைய தளத்தல் வைரலாகி வருகிறது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது. திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண அழைப்பிதழ் அட்டையில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கை உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன.
இந்து கடவுள்களின் படங்களுடன் வண்ண வண்ண அட்டைகளில் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள்
மற்றொரு சிறு பெட்டியில் தங்கம். வெள்ளி முலாம் பூசப்பட்ட கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன
விலையுயர்ந்த பட்டு துணிகள், உலர் பழங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன
பின் கோவில் போன்றதொரு வடிவில் பெட்டி உள்ளது. அதில் ஹிந்தியில் மந்திரங்கள் ஒலியுடன், தங்க விக்ரஹம், பட்டு வஸ்திரம், வெள்ளி கோவில் விமானம் என பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திருமண அழைப்பிதழ் சினிமா, அரசியல், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.