Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துகிறது ஜியோ

செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துகிறது ஜியோ

செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துகிறது ஜியோ

செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துகிறது ஜியோ

ADDED : ஜூன் 27, 2024 06:43 PM


Google News
Latest Tamil News
சென்னை: நாடுமுழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் உயர்த்தி உள்ளது.

இது குறித்து ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

இதன்படி மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.155 கட்டணம் ரூ.189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே போல் ரூ.239 ஆக இருந்த கட்டணம் ரூ.299 ஆகவும், ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் 28 நாட்களுக்கு ரூ. 299 (2 ஜிபி) ஆக இருந்த கட்டணம்349 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தினசரி 1.5 ஜிபி உடன் 3 மாதத்திற்கான கட்டணம் 666 ல் இருந்து 799 ஆக உயர்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 5 ஜி திட்டம் ஜூலை 3 ம் தேதி முதல் கிடைக்கும் எனவும், புதிய கட்டண விலை உயர்வு வரும் ஜூலை 3 ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us