/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாவட்டத்தில் களை கட்டிய அனுமன் ஜெயந்திமாவட்டத்தில் களை கட்டிய அனுமன் ஜெயந்தி
மாவட்டத்தில் களை கட்டிய அனுமன் ஜெயந்தி
மாவட்டத்தில் களை கட்டிய அனுமன் ஜெயந்தி
மாவட்டத்தில் களை கட்டிய அனுமன் ஜெயந்தி
ADDED : ஜன 12, 2024 01:29 PM
ஈரோடு: ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில், அனுமன் ஜெயந்தி விழா, களை கட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அஞ்சனை மைந்தனை வழிபட்டனர்.
அனுமன் ஜெயந்தியை ஒட்டி, ஈரோடு வ.உ.சி., பூங்காவில் அமைந்துள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு மகா கணபதி அபிஷேகம், 4:௦௦ மணிக்கு மூலவருக்கு மகா திருமஞ்சனம் நடந்தது. பின், 5:௦௦ மணிக்கு மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். மதியம், 1:௦௦ மணிக்கு வடைமாலை சாற்றப்பட்டது. மாலை, 5:௦௦ மணிக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடி நடந்தது.
விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டு, செந்துாரம், மஞ்சள் கயிறு, துளசி வழங்கப்பட்டது. இதேபோல் மாநகரில் உள்ள பிற ஆஞ்சநேயர் கோவில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
* அந்தியூர், தவிட்டுப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்த ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் கைகாட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னிமலையில் ஈங்கூர் சாலையில் உள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.
* டி.என்.பாளையம், கள்ளிப்பட்டியை அடுத்த பெருமுகையில், சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.