/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வுபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வு
ADDED : ஜன 12, 2024 12:02 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பொருள் விநியோகத்தை, அரசின் முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நெசல், ஒழுந்தியாம்பட்டு கிராமத்திலும், விழுப்புரம் நகர் 14வது வார்டு ரேஷன் கடைகளில், முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா ஆய்வு செய்தார். கலெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது முதன்மைச் செயலர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வானுார் அடுத்த நெசல், ஒழுந்தியாம்பட்டு கிராமத்திலும், விழுப்புரம் நகரிலும் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டோக்கன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதா எனவும், அரிசி, சர்க்கரையின் அளவு மற்றும் தரம், கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைகளின்றி, விடுபடாமல், பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் யசோதாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.