/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்
குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்
குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்
குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்
ADDED : ஜன 11, 2024 09:05 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுார் ஊராட்சியில் அமைந்துள்ள சட்டக்கல்லுாரியில் ஐநுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சட்டக்கல்லுாரியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பலமாவட்டங்களைச் சேர்ந்தமாணவ, மாணவியர் எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்., சட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சட்டக்கல்லுாரிக்கு குறைவான பேருந்துக்கள் இயக்கப்படுவதால் மாணவ, மாணவியர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சட்டக்கல்லுாரிக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுெமன மாணவ மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.