/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொங்கல் கொண்டாட்டம்: வேளாண் மாணவர்கள் உற்சாகம்பொங்கல் கொண்டாட்டம்: வேளாண் மாணவர்கள் உற்சாகம்
பொங்கல் கொண்டாட்டம்: வேளாண் மாணவர்கள் உற்சாகம்
பொங்கல் கொண்டாட்டம்: வேளாண் மாணவர்கள் உற்சாகம்
பொங்கல் கொண்டாட்டம்: வேளாண் மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஜன 12, 2024 12:01 AM
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் மன்றம் சார்பில், பொங்கல் விழா மற்றும் மாணவர் கலை விழா கொண்டாட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடந்தது. வளாகம் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தது. மாணவர்கள் வேட்டி, சட்டையும், மாணவிகள் சேலையும் அணிந்து உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்ற இவ்விழாவில், புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு மேற்கொண்டனர். தவிர, உறியடித்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், ஸ்லோ சைக்கிளிங், சாக்கு பை ஓட்டம் என பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவர்கள், மாணவிகள் ஆர்வத்துடன் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்ந்தனர்.
மேலும், மாடுகளுக்கு பூஜை செய்து மரியாதை செலுத்தினர். மாட்டு வண்டி பயணம் மாணவர்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் இருந்தது. இக்கொண்டாட்டத்தில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், அனைத்து பிரிவு டீன்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.