செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: ஆக.,5க்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: ஆக.,5க்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: ஆக.,5க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 25, 2024 12:16 PM

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சில கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்காமல் இருந்த நிலையில் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இன்று (ஜூலை 25) வழக்கை ஒத்திவைத்தது.
ஆனால், இன்று வழக்கு, விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி அபய் எஸ்.ஓஹா முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி முறையிட்டார். பின்னர், செந்தில் பாலாஜி வழக்கு ஆக.,5ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.