ADDED : ஜூலை 13, 2011 01:35 AM
கடலூர் : பணி ஓய்வு பெற்ற மாவட்ட நூலக அலுவலருக்கு பாராட்டு விழா நடந்தது.
கடலூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாவட்ட மைய நூலகத்தின்
மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) பச்சையப்பன் ஓய்வு பெற்றார். இதைத்
தொடர்ந்து இவருக்கு நூலக அலுவலக வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட
நூலக அலுவலர் சின்னதம்பி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் சுதர்சனம்
வரவேற்றார். முதல்நிலை நூலகர் (பொறுப்பு) சந்திரபாபு, மகாவீர்மல் மேத்தா,
குடியிருப்போர் நல சங்க மருதவாணன், வக்கீல் அருளப்பன், ஜனார்த்தனம்,
ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர் கிருஷ்ணசாமி
மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜன் வாழ்த்திப் பேசினார். கவிஞர் பால்கி,
சுப்ரமணியன், வக்கீல் மன்றவாணன், கவிமனோ, அழகு சாமிக்கண்ணு பங்கேற்றனர்.