/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/108 ஆம்புலன்ஸ் மூலம் 37 ஆயிரம் பேர் பயன்108 ஆம்புலன்ஸ் மூலம் 37 ஆயிரம் பேர் பயன்
108 ஆம்புலன்ஸ் மூலம் 37 ஆயிரம் பேர் பயன்
108 ஆம்புலன்ஸ் மூலம் 37 ஆயிரம் பேர் பயன்
108 ஆம்புலன்ஸ் மூலம் 37 ஆயிரம் பேர் பயன்
ADDED : ஜன 12, 2024 12:42 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 2023ம் ஆண்டில் மட்டும் 37 ஆயிரத்து 384 மக்கள் பயன்பெற்றுள்ளதாக 108 ஆம்புலன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 17 அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், 7 அதிநவீன உயிர் காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், 2 பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் என 26 அவசர 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிரசவ தேவைக்கு 11 ஆயிரத்து 779 பேரும், சாலை விபத்துக்களில் 8090 பேரும், இதர அவசர மருத்துவ தேவைக்காக 17 ஆயிரத்து 515 பேரும் என 37 ஆயிரத்து 384 பேர் மாவட்டத்தில் பயனடைந்துள்ளனர்.