/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்ட மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்களை சரிபார்க்க எதிர்பார்ப்பு மாவட்ட மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்களை சரிபார்க்க எதிர்பார்ப்பு
மாவட்ட மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்களை சரிபார்க்க எதிர்பார்ப்பு
மாவட்ட மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்களை சரிபார்க்க எதிர்பார்ப்பு
மாவட்ட மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்களை சரிபார்க்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 01, 2024 03:55 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என தீயணைப்புத்துறையினர் சரிபார்க்க வேண்டும்.
புது டில்லியில் விவேக் விஹார் பகுதியில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் கருகி பலியாகின. இதைவிசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவமனைக்கு தீயணைப்பு தடையில்லா சான்று உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீயணைப்பு தடையில்லா சான்று பெற்றுள்ளனரா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
தீ தடுப்பு உபகரணங்களான தீயணைப்பான்கள், மண் சட்டிகள் சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட தீயணைப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் காலவாதியான தீயணைப்பான்களும், தீ தடுப்பு உபகரணங்கள் கண்டு கொள்ளாமலும் விடப்படுகின்றன.
இந்த நிலை அரசு மருத்துவமனைகளில் இன்னும் அதிகமாக உள்ளது.
மேலும் இன்னும் சில மருத்துவமனைகள் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லக்கூடஇடம் இல்லாத வகையில் நெருக்கடியான சூழலில் அமைந்துள்ளன.
இது போன்ற மருத்துவமனைகளுக்கு எப்படி தடையில்லா சான்று வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைகளில் தீயணைப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனையில் ஒரு தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் வெளியேறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.
இதனால் அசம்பாவிதமும் நடக்கவும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தீயணைப்புத்துறையினர் கள ஆய்வு செய்வது அவசியம்.