/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனைஅபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை
அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை
அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை
அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை
ADDED : ஜன 12, 2024 03:43 AM

புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியையொட்டி சாரதாம்பாள் கோவில் அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் அபய ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி உள்ளார்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபய ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை இரவு 9.30 மணி வரை நடந்தது.ஒவ்வொரு கால லட்சார்ச்சனையின்போது வடமாலை,அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.