/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருடர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்திருடர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
திருடர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
திருடர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
திருடர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
ADDED : ஜன 12, 2024 12:12 AM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே கிராம்புளி கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள சர்ச்சில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
இங்குள்ள புனித ஆரோக்கியநாதர் சர்ச்சில் அக்.30ம் தேதி திருடர்கள் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். காளையார்கோவில் போலீசில் கிராம மக்கள் புகார் அளித்தனர். இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் கிராம மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். டி.எஸ்.பி., சிபி சாய் சௌந்தர்யன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் கைது செய்து விடுவதாக டி.எஸ்.பி., தெரிவித்தார். அதன் பெயரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.