/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டையில் வேகத்தடுப்பால் விபத்து தேவகோட்டையில் வேகத்தடுப்பால் விபத்து
தேவகோட்டையில் வேகத்தடுப்பால் விபத்து
தேவகோட்டையில் வேகத்தடுப்பால் விபத்து
தேவகோட்டையில் வேகத்தடுப்பால் விபத்து
ADDED : ஜூன் 01, 2024 04:31 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலும், நகருக்குள் வேகத்தடுப்பு என்ற பெயரில் தடுப்புகளை வைத்து உள்ளனர். இதில் எச்சரிக்கையை காட்டிலும் விளம்பரங்கள் தான் பிரதானமாக உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் எந்த வித கட்டணமும் இன்றி போலீசார் அனுமதியுடன் நடுரோட்டில் விளம்பர போர்டு வைக்கிறார்கள்.
சடையன்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் வளாகத்தில் பஸ்கள் உணவுக்காக நிறுத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன் இரவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்த பஸ் விளம்பர தடுப்பு காரணமாக எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்துக்குள்ளானது. இதில் பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் பெரிதாக பேசப்படவில்லை. ஓட்டல் வாசலில் ரோட்டின் குறுக்கே வைத்து உள்ள விளம்பர தடுப்பை அகற்ற வேண்டும். மேலும் ரோடுகளில் வைக்கும் வேகக்கட்டுப்பாடு விளம்பர தடுப்புகளில் விளம்பரங்கள் சிறிய அளவில் எழுத வேண்டும். விளம்பர அளவை குறைத்து ஒளிரும் ஸ்டிக்கர்களை அதிக அளவு ஒட்ட வேண்டும். இதன் மூலம் விபத்தை குறைக்கலாம்.
மேலும் தேவகோட்டை நகருக்குள் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர போர்டுகள் சமீப காலமாக பெருகி வருகிறது. கடைகளில் ரோடு வரை ஆக்கிரமிப்பும் அதற்கு அப்பால் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர போர்டு வைக்கின்றனர். போலீசார் பாரபட்சம் பார்க்காமல் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள போர்டுகளை அகற்றி அபராதம் விதிக்க வேண்டும்.