/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு, வடக்கு அணிகள் வெற்றிமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு, வடக்கு அணிகள் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு, வடக்கு அணிகள் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு, வடக்கு அணிகள் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு, வடக்கு அணிகள் வெற்றி
ADDED : ஜன 12, 2024 03:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில், புதுச்சேரி தெற்கு அணியும், வடக்கு அணியும் வெற்றி பெற்றுள்ளன.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்.நிறுவனம் இணைந்து நடத் தும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த 2ம் தேதி துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு நடந்த போட்டியில் மாகி அணியும், புதுச்சேரி தெற்கு அணியும் மோதின.
முதலில் ஆடிய மாகி அணி 14.2 ஓவர்களில் 59 ரன்களில் ஆட்டமிழந்தது. கரண் கண்ணன் 3 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 60 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கரண் கண்ணன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தொடர்ந்து, நேற்று மதியம் 3 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி வடக்கு அணியும், ஏனாம் அணியும் மோதின. டாஸ் வென்று புதுச்சேரி வடக்கு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய புதுச்சேரி வடக்கு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
புதுச்சேரி வடக்கு அணியின் சுனில் குமார் 53 பந்துகளில் 64 ரன்களும் அரவிந்த் ஆகாஷ் 30 பந்துகளில் 55 ரன்களும் அடித்தனர்.
தொடர்ந்து, ஆடிய ஏனாம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 129 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் புதுச்சேரி வடக்கு அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுச்சேரி வடக்கு அணியின் உமர் பட்னியின் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.