/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின் நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்மின் நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
மின் நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
மின் நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
மின் நுகர்வோர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
ADDED : ஜன 11, 2024 09:35 PM
திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் வரவேற்றார். உதவி கோட்ட பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் என, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்வதால், மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. அத்திமாஞ்சேரி துணை மின்நிலையத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளன.
மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்வதில் மின்வாரிய அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றனர் என சரமாரி புகார் தெரிவித்தனர்.
அதேபோல் திருத்தணி ஒன்றிய விவசாயிகள், விவசாய கிணறுகளுக்கு இலவச மின்இணைப்பு விரைந்து வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
நெடுகல் கிராமத்தில் கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.