மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை
மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை
மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை
ADDED : ஜன 12, 2024 01:47 PM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ராசிபுரம், சேலம் சாலையில் பிரசித்தி பெற்ற அபயஹஸ்த ஆஞ்சயேநர், ஏரிக்கரை ஆஞ்சநேயர், வைர ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, இக்கோவில்களில், நேற்று முன்தினம் முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. கோவிலை சுற்றி மலர் மாலைகள் கட்டப்பட்டிருந்தன. நேற்று வடை மாலை அலங்காரம், வெண்ணைய் காப்பு அலங்காரம், வெள்ளிகாப்பு அலங்காரம், செந்துார அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை, 5:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், நாமகிரிப்பேட்டையில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவில் ஆஞ்சயேர், மெட்டாலா கணவாய் ஆஞ்சயேர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
* ப.வேலுார் காவிரி கரையோரம் உள்ள குட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள காவேரி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், 22ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.