/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாலைகளில் நாய்கள் உலா; வாகனம் இயக்க இடையூறுசாலைகளில் நாய்கள் உலா; வாகனம் இயக்க இடையூறு
சாலைகளில் நாய்கள் உலா; வாகனம் இயக்க இடையூறு
சாலைகளில் நாய்கள் உலா; வாகனம் இயக்க இடையூறு
சாலைகளில் நாய்கள் உலா; வாகனம் இயக்க இடையூறு
ADDED : ஜன 11, 2024 09:56 PM

கோத்தகிரி;கோத்தகிரி நகர சாலைகளில் கூட்டமாக தெரு நாய்கள் உலா வருவதால் வாகனம் இயக்குவதில் இடையூறு ஏற்படுகிறது.
கோத்தகிரி பஸ்நிலையம், பஜார் மற்றும் மார்க்கெட் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் அன்றாடம் வெளியேறும் காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகளை உண்ணுவதற்காக, நாய்கள் உலாவருகின்றன. கூட்டமாக வரும் நாய்கள், சாலையில் அங்கும் இங்கும் ஓடுவதால், வாகனங்கள் சென்று வருவதற்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.
மேலும், மக்கள் நடந்து செல்லும்போது, நாய்கள் துரத்துவதால், பாதுகாப்பற்ற நிலை தொடருகிறது. மக்கள் கூறுகையில், 'கோத்தகிரி நகர சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் தெரு நாய்களின் நடமாட்டம் இடையூறாக உள்ளது. நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.