Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரத்தில் மின்சாரம் தாக்கி மயங்கிய நபர் மீட்பு

மரத்தில் மின்சாரம் தாக்கி மயங்கிய நபர் மீட்பு

மரத்தில் மின்சாரம் தாக்கி மயங்கிய நபர் மீட்பு

மரத்தில் மின்சாரம் தாக்கி மயங்கிய நபர் மீட்பு

ADDED : ஜன 12, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 52; இவரது வீட்டில் தென்னை மரங்கள் இருந்த தென்னை மரத்தை பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கமல், 45: என்பவர் வெட்டினார்.

அப்போது, தென்னை ஓலை அருகிலிருந்த உயர்அழுத்த மின் கம்பியில் பட்டதால் கமல் மீது மின்சாரம் தாக்கியது. இதில் கமல் மரத்தின் மேலேயே அமர்ந்த நிலையில் மயங்கினார்.

உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஏணி உதவியுடன் மரத்தில் மயங்கிய நிலையில் இருந்த கமலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us