Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு

பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு

பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு

பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு

ADDED : ஜன 11, 2024 10:37 PM


Google News
சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.,12ல் செய்முறை தேர்வு துவங்குகிறது.

தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு மார்ச் 1; பிளஸ் 1க்கு மார்ச் 4; 10ம் வகுப்புக்கு, மார்ச் 26ல், பொதுத் தேர்வுகள் நடக்கின்றன.

இந்நிலையில், பிளஸ் 2வுக்கு, பிப்.,12 முதல் பிப்.,17 வரை செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்.,19 மற்றும் பிப்.,23ல் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us