/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நெடுஞ்சாலையில் பாயும் கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள் நெடுஞ்சாலையில் பாயும் கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்
நெடுஞ்சாலையில் பாயும் கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்
நெடுஞ்சாலையில் பாயும் கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்
நெடுஞ்சாலையில் பாயும் கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்
ADDED : ஜன 08, 2025 12:31 AM

திருப்பூர்; மங்கலம் பகுதியில், மாநில நெடுஞ்சாலை ரோட்டில் கழிவுநீர் பாய்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக, மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, சோமனுார் ரோடு பகுதியில், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நேரடியாக, மாநில நெடுஞ்சாலை ரோட்டில் விடப்படுகிறது.
சமீபத்தில், கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி முடிந்துள்ள நிலையில், கால்வாயில் வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், மெயின் ரோட்டில் வழிந்து சென்று கொண்டிருக்கிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் ரோட்டில் கழிவுநீர் பாய்ந்துகொண்டிருக்கிறது.
துர்நாற்றத்துடன் வெளியாகும் கழிவுநீர் ரோட்டின் இருபுறமும் தேங்கியிருக்கிறது; மிக அருகிலேயே, குடிநீர் 'வால்வு' இருந்தும், இதை சரிசெய்ய, ஊராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. சாக்கடை கழிவுநீர், குடிநீரில் கலக்கும் அபாயம் நீடிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக, மங்கலம் சுற்றுப்பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 'டிஸ்போசல்' பாயின்ட் இல்லாமல், சாக்கடை கால்வாய் கட்டப்பட்டதே, இதற்கு முக்கிய காரணம்; பி.டி.ஓ.,கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மெயின் ரோட்டில் கழிவுநீர் பாய்ந்து கொண்டிருப்பது, தொற்று நோய் பரவலுக்கு வழிவகுக்கும். கழிவுநீர் செல்ல வழியே இல்லாமல், மாற்று ஏற்பாடும் செய்யாமல், ரோடு வரை புதிய சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
எப்படி, பி.டி.ஓ.,கள் அனுமதித்தனர் என்றே தெரியவில்லை. ஊராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ரோட்டில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுத்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்,'' என்றனர்.