Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொங்கல் சிறப்பு ரயில் திருப்பூர் எப்போது வரும்? 

பொங்கல் சிறப்பு ரயில் திருப்பூர் எப்போது வரும்? 

பொங்கல் சிறப்பு ரயில் திருப்பூர் எப்போது வரும்? 

பொங்கல் சிறப்பு ரயில் திருப்பூர் எப்போது வரும்? 

ADDED : ஜன 12, 2024 12:24 AM


Google News
திருப்பூர்;'கோவையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயில், திருப்பூரில் நின்று செல்லும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும், 16, 17ம் தேதிகளில் கோவையில் இருந்து இரவு, 8:45 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06086), திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஸ்டேஷன்களில் நின்று, மறுநாள் காலை, 5:20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். திருப்பூரில், இரவு, 9:25 மணிக்கு நின்று செல்லும்.

தாம்பரத்தில் இருந்து 17 மற்றும் 18ம் தேதி காலை, 7:30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06085), மாலை, 4:30 மணிக்கு கோவை வந்து சேர்கிறது. திருப்பூருக்கு மதியம், 2:58 மணிக்கு வரும். 12 ஏ.சி., முன்பதிவு, இரண்டு படுக்கை வசதி, இரண்டு பொது பெட்டி உட்பட, 20 பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் இருக்கும்; பொங்கல் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us