வரி விவகாரத்தால் 'பாலிகேப்' ரூ.15,486 கோடி இழந்தது
வரி விவகாரத்தால் 'பாலிகேப்' ரூ.15,486 கோடி இழந்தது
வரி விவகாரத்தால் 'பாலிகேப்' ரூ.15,486 கோடி இழந்தது
ADDED : ஜன 11, 2024 10:44 PM

புதுடில்லி:மின்சார பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'பாலிகேப்' நிறுவனத்தின் பங்குகள், வரி ஏய்ப்பு புகாருக்கு மத்தியில், நேற்று 21 சதவீதம் சரிந்தது. மேலும், இந்நிறுவனம் அதன் சந்தை மதிப்பில் 15,486 கோடி ரூபாயை இழந்தது.
சமீபத்தில் பாலிகேப் குழும அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கணக்கில் வராத விற்பனையால், ஈட்டிய 1,000 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. எனினும், பாலிகேப் இந்தியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தைக்கு பதில் அளித்துள்ள அந்நிறுவனம், 'சோதனை நடவடிக்கைகளின் போது, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. சோதனை முடிவு குறித்து வருமான வரித் துறையிடமிருந்து இதுவரை எந்தத் தகவலையும் பெறவில்லை' என்று தெரிவித்துள்ளது.