ரூ.100 கோடியை தாண்டியது 'டான்சி' நிறுவனத்தின் விற்பனை
ரூ.100 கோடியை தாண்டியது 'டான்சி' நிறுவனத்தின் விற்பனை
ரூ.100 கோடியை தாண்டியது 'டான்சி' நிறுவனத்தின் விற்பனை
ADDED : ஜூன் 01, 2024 07:05 AM
சென்னை : தமிழக அரசின், 'டான்சி' நிறுவனத்தின் மரச்சாமான்கள் விற்பனை, 2023 - 24 நிதியாண்டில், கடந்த ஜனவரி வரை, 100 கோடி ரூபாயை தாண்டிஉள்ளது.
தமிழக சிறு தொழில் நிறுவனமான டான்சி, எக்கு மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டில், பீரோ, மேஜை, நாற்காலி போன்றவற்றை தயாரித்து, அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்கிறது.
இதுதவிர, பள்ளி, கல்லுாரி, விடுதிகளில் பயன்படுத்தப்படும் வகுப்பறை பொருட்களையும் விற்பனை செய்கிறது. கடந்த, 2023 - 24ம் நிதியாண்டில், 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டான்சி திட்டமிட்டுஇருந்தது.
கடந்த ஜன., வரையிலான, 10 மாதங்களிலேயே அதன் விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டி, 101 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டான்சியின் விற்பனை, 2021 - 22ல், 46 கோடி ரூபாயாக இருந்தது; அதற்கு அடுத்தாண்டில், 125 கோடி ரூபாய் விற்பனை செய்ய திட்டமிட்டப்பட்டது. ஆனால், அதை விட அதிகமாக, 153 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த நிதியாண்டிலும் நிர்ணயித்த இலக்கை விட விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு, டான்சி தயாரிப்புகள் அதிக தரமுடன் இருப்பதே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.