/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நீரிழிவு நோய்கள் குறித்து தூர்தர்ஷனில் இன்று விளக்கம்நீரிழிவு நோய்கள் குறித்து தூர்தர்ஷனில் இன்று விளக்கம்
நீரிழிவு நோய்கள் குறித்து தூர்தர்ஷனில் இன்று விளக்கம்
நீரிழிவு நோய்கள் குறித்து தூர்தர்ஷனில் இன்று விளக்கம்
நீரிழிவு நோய்கள் குறித்து தூர்தர்ஷனில் இன்று விளக்கம்
ADDED : ஜூலை 13, 2011 01:28 AM
புதுச்சேரி : புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று 13ம் தேதி நீரிழிவு நோய் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
தூர்தர்ஷன் இயக்குனர் துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு நேயர்கள் நேரடியாக தொலைபேசி வழியே பங்கு பெறும் தொலைப்பாலம் நிகழ்ச்சி இடம் பெற உள்ளது. 'நீரிழிவு நோய்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. நீரிழிவு நோயின் அறிகுறிகள், அந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அந்நோய் வராமல் தடுக்கும் விதங்கள், வந்த பின் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள், மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்ற பயிற்சி முறைகள், சிகிச்சை முறைகள் போன்ற நேயர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு சென்னை நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் பெரியாண்டவர் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கம் பெற விரும்பும் நேயர்கள் 0413-2275072, 2275073 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள் ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.