ADDED : ஜூன் 01, 2024 12:44 AM

புல்டோசர் வரும்!
அவுரங்கசீப் பாதையை பின்பற்றுபவர்களை, என் புல்டோசர் வைத்து டீல் செய்ய வேண்டி இருக்கும். அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பால் தான் நம் நாடு நிர்வகிக்கப்படும். ஷரியா சட்டத்தால் இல்லை.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர்,
பா.ஜ.,
ஏன் இந்த நாடகம்?
பிரதமர் மோடி சாதாரண மனிதர் இல்லை, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றால், அவருக்கு கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது. விளம்பரத்துக்காக அவர் கன்னியாகுமரி சென்றுள்ளார்.
பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர்,
காங்கிரஸ்
பாகிஸ்தானி என்கின்றனர்!
இந்தியா -- பாகிஸ்தான் இடையே பேச்சு நடக்க வேண்டும் என்று கூறினால், என்னை பாகிஸ்தானி, காலிஸ்தானி என்றும், அமெரிக்க கைக்கூலி என்றும் அழைக்கின்றனர். இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ பேச்சு நடத்துவது முக்கியம்.
பரூக் அப்துல்லா
தலைவர்,
தேசிய மாநாட்டு கட்சி