பெங்., தெற்கு தொகுதிக்கு காவிரி நீர் அதிகாரிகளுக்கு சிவகுமார் 'கெடு'
பெங்., தெற்கு தொகுதிக்கு காவிரி நீர் அதிகாரிகளுக்கு சிவகுமார் 'கெடு'
பெங்., தெற்கு தொகுதிக்கு காவிரி நீர் அதிகாரிகளுக்கு சிவகுமார் 'கெடு'
ADDED : ஜன 11, 2024 11:40 PM

பெங்களூரு: பெங்களூரு தெற்கு தொகுதி மக்களுக்கு, அடுத்த 3 முதல் 4 மாதங்களில், காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு எலச்சனஹள்ளியில், 'உங்கள் வீட்டு வாசலில் அரசு' என்ற பெயரில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெங்களூரு தெற்கு, பொம்மனஹள்ளி, ஆனேக்கல் தொகுதிக்கு உட்பட்ட கூட்லு வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களை குறைகளை துணை முதல்வர் சிவகுமாரிடம் வெளிப்படுத்தினர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும், சிவகுமார் பெற்று கொண்டார்.பின் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் தொகுதிகளில் நிலவும் பிரச்னை குறித்து, எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் மக்களிடம் குறைகேட்பு கூட்டத்தை நடத்தினேன்.
பெங்களூரு நகருக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு, காவிரி குடிநீர் வழங்க வேண்டும். அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள், பெங்களூரு தெற்கு தொகுதி மக்களுக்கு, காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
மக்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண எங்களிடம் வருகின்றனர். நீங்கள் எங்களை தேடி வருவதற்கு பதில், நாங்கள் உங்களை தேடி வருகிறோம். பெங்களூரில் அனைத்து சட்டசபை தொகுதியிலும், நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்போம்.
நீங்கள் அளிக்கும் மனுவில், உங்கள் மொபைல் போன் எண்களை கட்டாயம் எழுதுங்கள்.
இதன்மூலம் அதிகாரிகள் உங்களை அழைத்து பேச முடியும். உங்கள் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாமல் போகலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், கண்டிப்பாக தீர்க்க முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.