ஜோ பைடனுக்கு பதிலாக மிச்சைல் ஒபாமா அதிபர் வேட்பாளராகிறார் ?
ஜோ பைடனுக்கு பதிலாக மிச்சைல் ஒபாமா அதிபர் வேட்பாளராகிறார் ?
ஜோ பைடனுக்கு பதிலாக மிச்சைல் ஒபாமா அதிபர் வேட்பாளராகிறார் ?
ADDED : ஜூன் 29, 2024 08:15 PM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், அதிபர் ஜோ பைடன், 81, சொதப்பினார். இதனால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது.
இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்
பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, டிரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். இது, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், அதிபர் வேட்பாளராக ஜோ பைடனை மாற்றுவது தொடர்பாக பேச்சு எழுந்து உள்ளது.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சைலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.