சித்தராமையாவுக்கு நெருக்கடி தரும் ஒக்கலிகர் மடாதிபதி
சித்தராமையாவுக்கு நெருக்கடி தரும் ஒக்கலிகர் மடாதிபதி
சித்தராமையாவுக்கு நெருக்கடி தரும் ஒக்கலிகர் மடாதிபதி
UPDATED : ஜூன் 29, 2024 09:02 PM
ADDED : ஜூன் 29, 2024 08:55 PM

பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியை சிவக்குமாருக்கு விட்டு கொடுங்க என கர்நாடக ஒக்கலிகர் சமூக மடாதிபதிகள் முதல்வர் சித்தராமையாவை வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகா முதல்வராக காங்.. கட்சியின் சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் உள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் கெம்பே கவுடா ஜெயந்தி விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவில் ஒக்கலிகர் மடாதிபதிகள் பங்கேற்றனர்.இம்மடாதிபதி கூறியது, கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் சித்தராமையா ஏற்கனவே அனுபவித்தவர். ஆகையால் முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத் தர வேண்டும். அப்படி செய்வதுதான் சித்தராமையாவுக்கும் நல்லது என்றார்.
ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்த பேச்சு குறித்து முதல்வர் சித்தராமையா கூறியது, முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும் என்றார். ஆனால் துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.