/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா பள்ளி தகுதிமாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா பள்ளி தகுதி
மாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா பள்ளி தகுதி
மாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா பள்ளி தகுதி
மாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா பள்ளி தகுதி
ADDED : ஜன 11, 2024 11:36 PM

கோவை;பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணியை வீழ்த்தி ராமகிருஷ்ணா பள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ராமலிங்கம் செட்டியார் பள்ளி சார்பில் 27ம் ஆண்டு 'ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான' மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோவையில் நடக்கிறது.
இதன் முதல் அரையிறுதிப்போட்டியில் ராமகிருஷ்ணா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. அணிக்காக பிரசன்னா (58) அரைசதம் அடித்தார். ஹரிஷ் ராகவ் (41) அதிரடியாக விளையாடினார்.
அடுத்து விளையாடிய ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணி 14.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ராமகிருஷ்ணா அணியின் தினேஷ் சேகர் நான்கு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.