ADDED : ஜூலை 13, 2011 01:38 AM
காட்டுமன்னார்கோவில் : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் டாஸ்மாக் மூடப்பட்டிருந்தாலும் பிற கடைகளில்
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதில், ரெட்டியார்
தெருவில் டாஸ்மாக் கடை அருகே இருந்த இந்திரா நகர் தங்கவேல் மகன்
பானுசந்தர், 25, என்பவரின் கடையில் பதுக்கி வைத்திருந்த 96 குவாட்டர்
பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து
பானுசந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.