பாலில் விழுந்த பல்லி மாணவர்கள் 'அட்மிட்'
பாலில் விழுந்த பல்லி மாணவர்கள் 'அட்மிட்'
பாலில் விழுந்த பல்லி மாணவர்கள் 'அட்மிட்'
ADDED : ஜன 11, 2024 11:30 PM
பெலகாவி: அரசு பள்ளியில் வழங்கப்பட்ட பாலில், பல்லி விழுந்ததால் மாணவ - மாணவியர் உடல்நிலை பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில், பால் பாக்யா திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்தியது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், வாரத்தில் மூன்று நாட்கள் பால் வழங்கப்படுகிறது. இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால் சில இடங்களில், இதுவே மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பள்ளிகளில் சமையல் ஊழியர்கள், துாய்மை, சுகாதாரத்தை கடைபிடிக்காததால், உணவு சாப்பிடும் மாணவர்கள் உடல்நிலை பாதிப்படைந்து, மருத்துவமனைக்கு செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. பெலகாவியில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெலகாவி, ஹுக்கேரியின், உள்ளாகட்டி கானாபுரா கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. நேற்று காலை இங்குள்ள மாணவர்களுக்கு பால் வழங்கப்பட்டது. பால் குடித்த சிறிது நேரத்தில் மாணவ - மாணவியருக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு கொடுத்த பாலில் பல்லி விழுந்திருப்பது தெரிந்தது. 'நடந்த சம்பவத்துக்கு, சமையல் ஊழியர்கள், ஆசிரியர்களின் பொறுப்பின்மையே காரணம்' என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.