ADDED : ஜன 12, 2024 06:46 AM
தேவாரம் : தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பனிடம், டி.மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உனது மகன் கணேசன் 5 ஆண்டுகளுக்கு முன்பு அரை பவுன் மோதிரத்தை வாங்கி சென்று தரவில்லை. அந்த நகையை நீ தர வேண்டும் என அய்யப்பனை தகாத வார்த்தை பேசி, கையில் வைத்து இருந்த துப்பாக்கியின் (ஏர்கன்) பின் பக்க கட்டையால் அடித்து கீழே தள்ளினார். தடுக்க முயன்ற போது அய்யப்பனின் வலது சுண்டு விரலை கடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
தேவாரம் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.