/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்கும் உரங்களால் பயன் என்ன வேளாண் மாணவிகள் விளக்கம் மக்கும் உரங்களால் பயன் என்ன வேளாண் மாணவிகள் விளக்கம்
மக்கும் உரங்களால் பயன் என்ன வேளாண் மாணவிகள் விளக்கம்
மக்கும் உரங்களால் பயன் என்ன வேளாண் மாணவிகள் விளக்கம்
மக்கும் உரங்களால் பயன் என்ன வேளாண் மாணவிகள் விளக்கம்
ADDED : ஜூன் 01, 2024 05:11 AM
உத்தமபாளையம்: மதுரை வேளாண் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் செளமியா தலைமையில் கிராமப்புற வேளாள் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பண்ணைப்புரத்தில் விவசாயிகளிடம் மக்கும் உரம் பற்றி விளக்கினார்கள்.
இயற்கை முறையில் அங்கக பொருள்களை கொண்டு நுண்ணுயிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அழுக செய்வதே மக்கும் உரமாகும்.
மக்கும் உரமாக்குதலின் வெப்பநிலை, நோய் பரப்பும் கிருமிகள், களை விதைகளை அழிக்கின்றன. மக்கும் உரம் மண்ணுடன் சமநிலையை ஏற்படுத்துகிறது. மண்ணை பக்குவப்படுத்துகிறது. மாசு படுவதை குறைக்கின்றது. குப்பையின் அளவை குறைக்கின்றது. உரம் கையாளுவதை மேம்படுத்துகிறது.
நோய் பரப்பும் கிருமிகளை குறைக்கின்றது. கூடுதல் வருவாய் கிடைக்கிறது. பயிரை தாக்கும் பூச்சிகளை அழித்து நோய்களிலிருந்து பயிர்களுக்கு பாதுகாப்பு தருகிறது. என்றனர். திரளாக விவசாயிகள் பங்கேற்று விளக்கம் கேட்டனர்.