Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எய்ம்ஸ் கல்லூரியை திருமங்கலத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவு

எய்ம்ஸ் கல்லூரியை திருமங்கலத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவு

எய்ம்ஸ் கல்லூரியை திருமங்கலத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவு

எய்ம்ஸ் கல்லூரியை திருமங்கலத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவு

UPDATED : ஜன 12, 2024 12:00 AMADDED : ஜன 12, 2024 12:47 PM


Google News
மதுரை:
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளதுஇது குறித்து கூறப்படுவதாவது: 
மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உடன் இணைந்த மருத்துவக்கல்லூரி ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இதனை மதுரை திருமங்கலத்திற்கு மாற்ற எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது குறித்து எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் கூறி இருப்பதாவது: 
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடவசதி , மருத்துவபயிற்சியில் சிரமம் உள்ளது. இதனையடுத்து மதுரை திருமங்கலத்தில் ஓராண்டிற்கு தற்காலிக வாடகை கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டரை கோரி உள்ளது எய்ம்ஸ் நிர்வாகம்.100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் வரும் மார்ச் மாதம் துவங்கும் என கூறினார். 




      Our Apps Available On




      Dinamalar

      Follow us