Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பழங்குடியின மக்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கம்

பழங்குடியின மக்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கம்

பழங்குடியின மக்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கம்

பழங்குடியின மக்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கம்

ADDED : ஜன 12, 2024 03:48 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் அட்டவணை மற்றும் பழங்குடியின மக்களுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு நபருக்கு, ரூ.1,000 வழங்கும் திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் அட்டவணை மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி சேலைகளுக்கு ஈடாக தலா ரூ.1000 வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம், 1,27,628 பேர் பயனடைவர். இதற்காக மொத்தம் ரூ.12.76 கோடி செலவிடப்படுகிறது.

இந்த பயனாளிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி, சட்டசபையில் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின்போது, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us