ADDED : ஜன 12, 2024 04:17 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டத்திற்காக போடப்பட்டிருந்த ஷாமியானாவை போலீசார் அகற்றினர். அப்போது தி.மு.க., அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய மாவட்ட தலைவர் ஏழுமலை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.