ADDED : ஜூலை 13, 2011 01:31 AM

திருநெல்வேலி : நாங்குநேரி கூட்டுறவு வங்கியில் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி உள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு ஒரு கும்பல், வங்கி என நினைத்து அருகில் இருந்த ரேஷன் கடையில் சுவரில் கடப்பாறையால் துளையிட்டுள்ளனர். எனவே மீண்டும் வங்கியின் முன்புற கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு லாக்கரை உடைக்க முயற்சித்தனர். முடியாமல் கும்பல் அங்கு கிடைத்த டேபிள் பேன் போன்றவற்றை எடுத்துவிட்டு சென்றுள்ளனர். இரவில் பாதுகாவலுக்கு இருக்கவேண்டிய காவலாளி தங்கபாண்டி அப்போது இல்லை. பாங்க் செயலர் வில்சன் புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரித்தனர். கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஒரு பனியன், ஒரு ஸ்குரு டிரைவர் சிக்கின, இதே வங்கியில் 1999ல் கொள்ளையடிக்க முயன்ற கும்பல், வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு தப்பியது குறிப்பிடத்தக்கது.