ADDED : ஜன 12, 2024 12:42 AM
சாத்துார் : சாத்துார் சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் சரவண பெருமாள், 40 என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஜனவரி 8 ல் போலீசார் சோதனை செய்தபோது புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு தடையை மீறி மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனையை செய்ததால் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் நேற்று அந்த கடைக்கு சீல் வைத்தார். சாத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.