ADDED : ஜன 12, 2024 12:32 AM

பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் ஒன்றிணைவோம் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது.
அறிவியல் வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் எப்படி நிகழ்கின்றன. அதில் இருந்து தப்பிப்பது எப்படி, இழந்த பணத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் சமூக நீதி, மனித உரிமை மீறல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து போலீசார் விளக்கினர். தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழியையும் மாணவிகளுடன் எடுத்து கொண்டனர்.
மாணவிகளுக்கு தடகள போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். ஏ.டி.எஸ்.பி.,நமச்சிவாயம், தாளாளர் அசோக், முதல்வர் விசுமதி, டி.எஸ்.பி.,கண்ணன் பேசினர். டி.எஸ்.பி., பாலசிங்கம் நன்றி கூறினார்.