ADDED : ஜன 11, 2024 10:15 PM
அன்னுார்;குப்பேபாளையம் பகுதியில், பாரம்பரியமான கும்மி கலையை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர். இதையடுத்து இதன் அரங்கேற்ற விழா குப்பேபாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நாளை (13ம் தேதி) மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது.
பல்லடம் அனுப்பப்பட்டி ஆசிரியர் பழனிச்சாமியின் வள்ளி முருகன் கலைக்குழுவினர் இதுவரை 31 குழுக்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்றம் செய்துள்ளனர். 32 வது அரங்கேற்றம் நாளை நடக்கிறது. பொதுமக்கள் அரங்கேற்ற விழாவில் பங்கேற்க விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.