/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரிப்பு: பொங்கலையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுமா?கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரிப்பு: பொங்கலையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுமா?
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரிப்பு: பொங்கலையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுமா?
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரிப்பு: பொங்கலையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுமா?
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரிப்பு: பொங்கலையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுமா?
ADDED : ஜன 12, 2024 04:13 AM
கள்ளக்குறிச்சி:பொங்கல் பண்டிகையொட்டி கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்தல் மற்றும் விற்பனை அதிகரிக்கும் சூழலால் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சபடும் இடங்களை போலீசார் கடும் சிரமங்களுக்கு இடையே கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.
இடத்தினை போலீசார் அறிந்து விட்டால், அதனைத் தொடர்ந்து வேறு இடங்களில் சாராயம் காய்ச்சப்படுகிறது. மலைப் பகுதியில் போலீசார் சாரய ஊரல்களை அழித்தாலும் தொடர்ந்து காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் கல்வராயன்மலையில் சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுவதை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் சவலாக இருந்து வருகிறது.
மலைப் பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் பெரும்பாலும், சுற்று வட்டார சமவெளி பகுதிகளுக்கு கடத்தப்பட்டு கிராமப் புறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சமவெளியில் சாராயம் விற்பனை கட்டுப்படுத்தினால், மலையில் சாராயம் காய்ச்சுவது குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விற்பனையை ஒழித்தால், உற்பத்தி தானாக குறையும் என்ற முறையை போலீசார் பின்பற்றினால் போதும். ஆனால் போலீசார் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. பெரும்பாலான கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடக்கிறது.
பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கல்வராயன்மலை பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு கடத்தப்படுகிறது. மலையில் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொழிற்சாலை போல் செயல்படுகிறது.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகை காலங்களில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு கல்வராயன்மலை சுற்று வட்டார பகுதிகளில் முக்கிய வழித்தடங்களில் மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பொங்கல் பண்டிகையொட்டி கள்ளச்சாராயம் காய்ச்சவது, கடத்தல் மற்றும் விற்பனை சம்பவம் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு மலையிலிருந்து சாராயம் கடத்தி வரப்படும் முக்கிய வழித்தடங்களை கண்டறிந்து அப்பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த எஸ்.பி., சமய்சிங் மீனா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.