/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநில வாலிபால் லீக்: குமாரி அணி வெற்றிமாநில வாலிபால் லீக்: குமாரி அணி வெற்றி
மாநில வாலிபால் லீக்: குமாரி அணி வெற்றி
மாநில வாலிபால் லீக்: குமாரி அணி வெற்றி
மாநில வாலிபால் லீக்: குமாரி அணி வெற்றி
ADDED : ஜன 12, 2024 01:05 AM

சென்னை, தமிழ்நாடு கைப்பந்து கழக கூட்டமைப்பு ஆதரவுடன், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்களுக்கான மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டிகள், கடந்த 3ம் தேதி துவங்கி, இன்றுடன் முடிகின்றன.
மயிலாப்பூர், சாந்தோம் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் 14வது 'லீக்' ஆட்டத்தில், குமாரி பொனிக்ஸ் அணியை எதிர்த்து, கிருஷ்ணகிரி காளையர் அணி களமிறங்கியது.
இதில், 21--18, 16--21, 21--17, 21--18, 21--17 என, 4--1 என்ற செட் கணக்கில், குமாரி பொனிக்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.