/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அனுமன் ஜெயந்தி விழா; கோவில்களில் கோலாகலம்!அனுமன் ஜெயந்தி விழா; கோவில்களில் கோலாகலம்!
அனுமன் ஜெயந்தி விழா; கோவில்களில் கோலாகலம்!
அனுமன் ஜெயந்தி விழா; கோவில்களில் கோலாகலம்!
அனுமன் ஜெயந்தி விழா; கோவில்களில் கோலாகலம்!
ADDED : ஜன 11, 2024 11:35 PM

கோவையிலுள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி உற்சவம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் அனுமன் ஜெயந்தி உற்சவம் கடந்த ஜன., 9ம் தேதி துவங்கியது.
நேற்று காலை 5:00 மணிக்கு அபிஷேகம், ஸ்ரீ ராமர்,சீதா, அனுமான் மூல மந்த்ர ஹோமங்கள்.8:30 மணிக்கு மஹாதீபாராதனை, மாலை 6:30 மணிக்கு வேதபாராயணத்துடன் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பீளமேடு நவஇந்தியாவிலுள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு நேற்று சகலதிரவிய அபிஷேகங்களை தொடர்ந்து சுவாமிக்கு ராஜதர்பார் அமைத்து அந்த சிம்மாசனத்தில் வீர மாருதி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் கோவில் வளாகத்திலுள்ள ஆஞ்சநேயர் துளசி மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.. மதுக்கரை ஏ.சி.சி., காலனி லட்சுமி நாராயணர் ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஒலம்பஸ் கணேசபுரம் சித்திவிநாயகர் கோவிலிலுள்ள வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு ஒன்பது வகை திரவியங்களில் சிறப்பு அபிஷே கம் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சுந்தராபுரம் எல்.ஐ.சி., காலனியிலுள்ள சப்தகிரி வெங்கடேஷ்வரர் கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர். தங்க கவசத்தில் அருள் பாலித்தார். ஒலம்பஸ் சித்தி விநாயகர் கோவிலிலுள்ள வரசித்தி ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை விஸ்வநாதபுரம் குபேர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததார்.
வடவள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயர் நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெருமாள் கோவில்களில் தனிசன்னிதியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திரளான பக்தர்கள் ஹனுமன்சாலீசா உள்ளிட்ட ஹனுமன் பக்தி பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.