ADDED : ஜன 12, 2024 01:04 AM
வேடசந்தூர்:தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குஜிலியம்பாறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் அருள்செழியன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் கணேசன் பேசினார். டிட்டோஜாக் சங்கங்களின் தலைவர்கள் மோகன்தாஸ், கிருஷ்ணமூர்த்தி, விஜயராகவன் பங்கேற்றனர்.வேடசந்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முருகன் பேசினார்.