/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பழ மரக்கன்றுகளுக்கு வரவேற்பு: மழையினால் அதிகரித்த நடவுபழ மரக்கன்றுகளுக்கு வரவேற்பு: மழையினால் அதிகரித்த நடவு
பழ மரக்கன்றுகளுக்கு வரவேற்பு: மழையினால் அதிகரித்த நடவு
பழ மரக்கன்றுகளுக்கு வரவேற்பு: மழையினால் அதிகரித்த நடவு
பழ மரக்கன்றுகளுக்கு வரவேற்பு: மழையினால் அதிகரித்த நடவு
ADDED : ஜன 12, 2024 12:04 AM
உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், பருவமழையினால் மரக்கன்றுகளின் வினியோகம் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கையை பாதுகாக்கவும், மரம் வளர்ப்பு திட்டம், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
அரசின் சார்பில், மரக்கன்றுகள் வளர்ப்புக்கான நாற்று பண்ணைகள் அமைப்பதற்கு, நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின், ஒரு பணியாக மரக்கன்று நடுதல் நடக்கிறது.
திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தில் நியமிக்கப்படும் பணித்தள பொறுப்பாளர்கள், இந்த பண்ணைகளை மேற்பார்வையிட்டு, பணிகளை கவனிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியத்தில், போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவவலகம் அருகே, நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில், மரக்கன்று நடும் பணிகளை தீவிரப்படுத்துகின்றனர். உடுமலை ஒன்றியத்தில், நடப்பாண்டில், 35 ஆயிரம் மரக்கன்றுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்கு, மூன்று மாதங்கள் உள்ள நிலையில், பருவமழை பரவலாக இருந்ததால், சுற்றுப்பகுதி விவசாயிகள் பழ மரக்கன்றுகளை நடுவதில், அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.
மாதுளை, கொய்யா உட்பட பல்வேறு பழ மரக்கன்றுகள், இரண்டு மாதங்களில் மட்டுமே ஐந்தாயிரத்தை விடவும் அதிகமாக, நாற்று பண்ணையிலிருந்து விவசாயிகள் பெற்றுள்ளனர்.
மேலும், பழ மரக்கன்றுகளுக்கு விவசாயிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் தற்போது புளி, வேம்பு போன்ற மரக்கன்றுகளுக்கு இணையாக, பழமரக்கன்றுகளும் பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன.