கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ADDED : ஜன 11, 2024 11:39 PM

பெங்களூரு: டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், கர்நாடகா அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கும்படி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
டில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின விழாவில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த, அலங்கார ஊர்திகள் பங்கேற்கும்.
தங்கள் மாநில கலை, கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வகையில், அலங்கார ஊர்திகள் இருக்கும்.இந்த அலங்கார ஊர்திகளை, மத்திய ராணுவ அமைச்சகம் தேர்வு செய்கிறது.
இந்நிலையில் வரும் 26 ம் தேதி நடக்கவுள்ள, குடியரசு தின விழாவில், கர்நாடகா அலங்கார ஊர்திக்கு அனுமதி கேட்டு, கர்நாடகா அரசு அலங்கார ஊர்தி குறித்த விவரத்தை, மத்திய ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.
ஆனால் இம்முறை குடியரசு தின அணிவகுப்பில், கர்நாடக அலங்கார ஊர்திக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்து உள்ளது.
இதுகுறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் சித்தராமையா நேற்று எழுதிய கடிதம்:
யுனெஸ்கோ அறிவிப்பு
டில்லி குடியரசு தின அணிவகுப்பில், கர்நாடக அலங்கார ஊர்தி 14 வருடம் தொடர்ந்து பங்கேற்று உள்ளது. இந்த அலங்கார ஊர்திக்கு கடந்த 2005, 2008, 2011, 2012, 2015, 2022ம் ஆண்டுகளில், பரிசு கிடைத்தது. இம்முறை 'பிராண்ட் பெங்களூரு', பெங்களூரு விமான நிலையத்தின் 2 வது முனையம் உட்பட, ஐந்து தீம்களை கர்நாடக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால், கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு, அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையம், உலகில் அழகான விமான நிலையம் என்று, யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
ஆனாலும் அலங்கார ஊர்தியில் இடம்பெற தேர்வாகவில்லை.
கன்னடர்கள் உணர்வு
மத்திய ராணுவ அமைச்சகம் நடத்தும், அனைத்து கூட்டங்களிலும், நாங்கள் தவறாமல் கலந்து கொள்கிறோம். அலங்கார ஊர்தியை தேர்வு செய்ய நடந்த கடைசி கூட்டத்தில் எங்களை சேர்க்கவில்லை. அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது, கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.
எனவே, 7 கோடி கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம். இதனால் உங்கள் முடிவை மறுபரீசிலனை செய்து, குடியரசு தின விழா அணிவகுப்பில், கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.