ADDED : ஜன 11, 2024 11:32 PM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இதுவரை நிகர வரி வருவாய் 19 சதவீதம் அதிகரித்து, 14.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் நிகர வரி வருவாய், நடப்பு நிதியாண்டில் இதுவரை 19.41 சதவீதம் அதிகரித்து, 14.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது பட்ஜெட் இலக்கில் 80.61 சதவீதமாகும். பட்ஜெட் தாக்கலின் போது, நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிகர வரி வருவாய் 18.23 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 2.48 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு செய்யப்பட்டுள்ளது.மொத்த கார்ப்பரேட் வருமான வரி 8.32 சதவீதமும்; தனிநபர் வருமான வரி 26.11 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.